தொழிலதிபர் வீட்டில் 10 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் திருட்டு

By: Udayaraman
12 October 2020, 5:57 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் தொழிலதிபர் வீட்டில் 10 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி கோலாஸ்நகர் காந்திவீதியை சேர்ந்தவர் சுஜய்காந்த். இருசக்கர வாகன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவரது மகனின் பிறந்தநாளையொட்டி தனது வீட்டில் பிறந்த நாள் கொண்டாடத்தில் ஈடுபட்டார். விழா முடிந்த பிறகு அவரது மனைவி அணிந்திருத்த நகைளை வீட்டின் மேஜையில் கழற்றி வைத்துவிட்டு தூங்க சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது நகைகளை காணவில்லை. இது இதனையடுத்து இதுகுறித்து ஒதியன்சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் வைரக்கம்மல், வைரதோடு உட்பட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடுபோய் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் வீட்டின் கதவுகள் ஏதும் உடைக்கப்படாத்தால் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவர்களே நகைகளை திருடி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 39

0

0