10% இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம்: ஆளுநரை காரணம் காட்டி நாராயணசாமி தப்பித்துக்கொள்வதாக குற்றச்சாட்டு

10 November 2020, 10:57 pm
Quick Share

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவபடிப்பில் 10% இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் துணைநிலை ஆளுநரை காரணம் காட்டி முதலமைச்சர் நாராயணசாமி தப்பித்துக்கொள்வதாக பாஜக மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன் குற்றச்சாட்டி உள்ளார்.

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம் தொடர்பான கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தார் மேலும் இவ்விவகாரம் தொடர்பாக நேற்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டதில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன், செல்வகணபதி,சங்கர் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து 10% இட ஒதுக்கீடு விவாகரத்து தொடர்பாக ஒப்புதல் அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தக்கோரி மனு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீட்டை அளிக்க மத்திய அமைச்சரை தொடர்பு கொண்டு பெற்றுத்தருவோம் என்றும் யூனியன் பிரதேசம் என்பதால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது காரணத்தால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மத்திய அரசுக்கு கோப்பை அனுப்பி உள்ளதாக தெரிவித்தார் என்றும் மேலும் 10% இட ஒதுக்கீடு விவகாரத்தை துணைநிலை ஆளுநர் தடுக்கவே அல்லது அளிக்க கூடது என சொல்லவில்லை என்றும் அரசின் கொள்கை முடிவு என்பதால் மத்திய அரசின் ஆலோசனை கேட்டுள்ளதாக தெரிவித்ததாவும் தெரிவித்தார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு அனுமதித்தால் உடனடியாக அமுல்படுத்த வாய்ப்பு உள்ளது என கிரண்பேடி தகவல் தெரிவித்ததாகவும் மேலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை காரணம் காட்டி முதலமைச்சர் நாராயணசாமி தப்பித்துக்கொள்கிறார் என்றார் தொடர்ந்து பேசிய அவர் காங்கிரஸ் தலைவர் போல் முதலமைச்சர் நாராயணசாமி செயல்படுகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

Views: - 21

0

0