ஓட்டேரியில் ரவுடிகள் வேட்டை…ஒரே இரவில் 10 ரவுடிகள் கைது…

Author: Udhayakumar Raman
31 July 2021, 10:56 pm
Quick Share

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உத்தரவின் பேரில் புளியந்தோப்பு , பேசின்பிரிட்ஜ் , ஓட்டேரி ஆகிய பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் ஓட்டேரி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நேற்று இரவு ஓட்டேரி பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

அந்த வகையில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த மொக்க என்கின்ற மகேஷ், பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்கின்ற பாட்டில் பிரபா, சுனில் என்கின்ற பிரபாகரன், ராஜேஷ் என்கின்ற கரிமட்டை ராஜேஷ், மற்றொரு ராஜேஷ் என்கின்ற திருவிக ராஜேஷ், தர்மா என்கின்ற தர்மராஜ், சதீஷ்குமார், இசக்கி, தீபக் குமார், சதீஷ் என்கின்ற அஞ்சு லைட் சதீஷ், ஆகிய 10 பேரையும் நேற்று ஒரே இரவில் ஓட்டேரி போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Views: - 131

0

0