ஷோ ரூமில் கொள்ளையடித்த 11 பேர் கைது… அதிரடியாக களம் இறங்கிய காவல்துறை…

8 September 2020, 7:16 pm
Quick Share

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உள்ள ஷோ ரூமில் விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த 11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி அருகில் உள்ள டார்லிங் டிவி ஷோ ரூமில் கடந்த 4ஆம் தேதி ஷோரூமின் பூட்டை உடைத்து அதில் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் கல்லாப் பெட்டியில் இருந்த ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில், திருப்பத்தூர் டிஎஸ்பி தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்ததில்,

ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த சதீஸ், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த மாதேஷ், ராகவேந்திரன், வீரமணி, விஸ்வா, சுதாகர் உள்ளிட்ட 11 நபர்களை 24மணி நேரத்தில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்த 30 விலை உயர்ந்த செல்போன்கள், 9 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

Views: - 0

0

0