வேலை கேட்டு சுற்றி திரிந்த 11 வயது சிறுவன் சைல்டு லைன் அமைப்பிடம் ஒப்படைப்பு

19 November 2020, 8:32 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளக்கரை அருகே வேலை கேட்டு சுற்றி திரிந்த 11 வயது சிறுவனை காஞ்சிபுரம் காவல் கோட்ட துணை  கண்காணிப்பாளர் மணிமேகலை மீட்டு சைல்டு லைன் அமைப்பிடம் ஒப்படைத்தார்.

காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளக்கரை அருகே 11 வயது சிறுவன் அப்பகுதி வழியாக செல்வோரிடம் தனது தாய் தந்தை இல்லை எனவும் ஏதாவது வேலை கொடுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் காஞ்சிபுரம் காவல் கோட்ட துணை கண்காணிப்பாளர் மணிமேகலைக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்து சிறுவனை மீட்ட டிஎஸ்பி அவனிடம் விசாரணை நடத்தினார்.

அதில் சிறுவன் முன்னுக்கு பின்னாக தகவல்களை அளித்ததால் அவனை காஞ்சிபுரம் சைல்டு லைன் மற்றும் தொண்டு நிறுவனம் உறுப்பினர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதன்பேரில் சைல்டு லைன் அலுவலர் கிருபாகரன் மற்றும் அவரது தொண்டு நிறுவன அலுவலர் மோகன் ஆகியோர் சிறுவனை அழைத்துச் சென்று குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Views: - 15

0

0