110 செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

23 January 2021, 5:17 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் காணாமல் போன ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் காவல்துறை ஒப்படைத்தது.

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன்கள் காணாமல் போனது மற்றும் திருட்டு போனது தொடர்பாக 2020 – 2021ம் வருடத்தில் காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் அனைத்து செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை உத்தரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ராஜா என்பவர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. செல்போன்கள் தொடர்பான புகார் மனு மற்றும் காவல் நிலையங்கள் வாரியாக சேகரித்து ,

அதன் மூலம் விசாரணை செய்து தனிப்படை நடத்திய அதிரடி சோதனையில், களவுபோன மற்றும் காணாமல் போன ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்களை மீட்டு அனைத்து செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை சம்பந்தப்பட்ட செல்போன்களின் உரிமையாளரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து ஒப்படைத்தார். இச்சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை வெகுவாக பாராட்டினார்.

Views: - 0

0

0