ஆற்று வெள்ளத்தில் இறங்கிய 12 வயது சிறுவன் உயிரிழப்பு

27 November 2020, 7:55 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் இறங்கிய 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிவர் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையில் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் பாலாற்றில் பாலத்தை கடந்து மழை வெள்ளம் ஆற்றில் பாய்கிறது. பாலாற்றில் செல்லும் தண்ணீரை காண ஏராளமான மக்கள் பாலத்தின் மீது திரண்டு வருகின்றனர். நிலையில் வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ரித்திஷ் ஆற்று நீரில் இறங்கி விளையாடியபோது அப்பகுதியில் மணல் திருடர்கள் ஏற்படுத்திய ஆபத்தான பள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளான்.

தகவலறிந்து சென்ற உறவினர்கள் சிறுவனின் சடலத்தை மீட்டு மீட்ட நிலையில் சடலத்தை கைப்பற்றிய வாணியம்பாடி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து பாலாற்று பகுதிகளில் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று இருப்பதால் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், ஆபத்தை உணராமல் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என உதயேந்திரம் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.

Views: - 0

0

0