கார் மற்றும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்திய 13 பேர் கைது

Author: kavin kumar
25 August 2021, 2:32 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியதாக 13 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி பகுதியைச் சேர்ந்த காளிராஜ் என்பவர் நண்பருடன் கோட்டைப்பட்டி பகுதியில் செல்லும் பொழுது தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரைட்டன்பட்டி பகுதியில் புகுந்த நபர்கள் அங்கிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை இரவில் கட்டைகளால் சேதப்படுத்தியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் கோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் உட்பட 13 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து மோதல் ஏற்படாவண்ணம் கோட்டைப்பட்டி மற்றும் ரைட்டன்பட்டி பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 217

0

0