அரசு ஊழியர்கள் சங்கத்தின் 13-வது மாவட்ட மாநாடு

Author: kavin kumar
30 October 2021, 4:31 pm
Quick Share

தருமபுரி: தேர்தல் நேரத்தில் சொன்னபடி அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றாவிட்டால் உரிமைக்கான போராட்டம் நடத்துவோம் என தருமபுரியில் நடைபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் மாநில தலைவர் அன்பரசன் தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 13-வது மாவட்ட மாநாடு தருமபுரியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதிய மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த அதிமுக எடப்பாடி ஆட்சியில் அனைத்தையும் பறித்துக் கொண்ட நிலையில் இழப்பதற்கு ஒன்றுமில்லை என தருமபுரியில் அரசு ஊழியர் சங்கத்தின் பிரதிநிதித்துவ பேரவை மாநாடு நடைபெற்றது. அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மதுரையில் போராட்ட ஆயத்த மாநாட்டில் காணொளி மூலமாக கலந்து கொண்டு தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடம் பறிப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் அதிமுக ஆட்சி அனைத்தையும் பறித்து விட்டது. திமுக ஆட்சி அமைந்தவுடன் அரசு ஊழியர்களின் பறித்த சலுகைகள் மட்டுமல்ல, பறிக்கப்பட்ட மாநில தலைவர் சுப்பிரமணியன்,

தற்காலிக பணி நீக்கம் அனைத்தையும் நிறைவேற்றுவேன், நம்பிக்கையோடு இருங்கள் என்று உறுதியளித்தார். ஆனால் பதவியேற்ற பின் நடந்த முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் எங்களுடைய நம்பிக்கை பொய்த்துப் போன வகையில் உள்ளது. ஆனால் தமிழக முதல்வருக்கு தெரிந்தோ, தெரியாமலோ மாநில நிதி அமைச்சர் தியாகராஜன் அரசு ஊழியர்களின், அகவிலைப்படியை வழங்க மறுத்ததால் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 17 மற்றும் 18 ம் தேதிகளில் அரசு ஊழியர் மாநாட்டில் முதல்வர் பங்கேற்க இருக்கிறார். அப்போதாவது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் மாநாடு நடத்த உள்ளோம். அவ்வாறு நடக்கவில்லை என்றால் ஒரு கடைசி ஆயுதம் போராட்டம் தான் என்றும், தொடர்ந்து அடுத்த கட்டமாக எங்களது உரிமைக்கான போராட்டத்தை நடத்த உள்ளோம் என தெரிவித்தார்.

Views: - 204

0

0