பிலிகுண்டுலுவிற்கு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வருகை

Author: kavin kumar
28 August 2021, 4:33 pm
Quick Share

தருமபுரி: காவிரி ஆற்றில் கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டு இருக்கிறது.

கர்நாடக மற்றும் கேரளா மாநிலங்களில் உள்ள வயநாடு குடகு உள்ளிட்ட காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதையடுத்து கர்நாடக மாநிலம் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி கடந்த 25 ம் தேதி தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு கிருணராஜசாகர் அணையிலிருந்து 8 ஆயிரத்து 400 கன அடி நீரும், கபினி அணையிலிருந்து 4 ஆயிரத்து 100 கன அடி நீர் என மொத்தம் விநாடிக்கு 12 ஆயிரத்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டன.

இந்த நீர் இரண்டு நாட்களுக்குள் தமிழகத்திற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக காவிரி கரையோரங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் நேற்று மாலை முதல் தமிழக எல்லையான பிலிகுண்டுவில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி இன்றையை நிலவரப்படி விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக தற்போது வந்து கொண்டு இருக்கிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்ககூடும் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா நீர்வீழ்ச்சியில் பொது மக்கள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தடை விதிக்கபட்டுள்ளது. மேலும் வருவாய் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்டு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 186

0

0