வளைகாப்புக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: கர்ப்பிணி பெண் உள்ளிட்ட 15 பேர் படுகாயம்…

Author: Udayaraman
4 August 2021, 7:58 pm
Quick Share

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் அருகே வளைகாப்புக்கு சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து நிகழ்வு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தமிழ் என்பவருக்கு இன்று நடைபெற்ற வளையகாப்பு நிகழ்விற்காக திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பள்ளரிபாலையம் கிராமதிலிருந்து பெண் வீட்டார் வேன் மூலமாக கண்டாச்சிபுரம் சென்றுள்ளனர். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய போது கண்டாச்சிபுரத்திலிருந்து ஆலம்பாடி செல்லும் சாலையில், வளைவு பாதையில் திரும்பும் போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வேனை திருப்பியுள்ளார்.

இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணித்த கர்ப்பிணி பெண் தமிழ் உள்ளிட்ட 15 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் 15 பேரையும் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 60

0

0