காந்தி உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

2 October 2020, 2:19 pm
Quick Share

நீலகிரி: உதகையில் காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா காந்தி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சர்வோதய சங்கம் மற்றும் காதி கிராப்ட்டில் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி விழா நடைபெற்று வரும் நிலையில் அனைத்து தலைவர்களும் அவருக்கு பல இடங்களில் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதவி சேரிங் கிராஸ் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மதநல்லிணக்க ஒருமைப்பாடு குழுவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் சர்வோதய சங்கம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் காதி கிராப்ட் ன் தீபாவளி சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், கிராம தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி விற்பனையானது, காதி கிராப்ட் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 72 லட்ச ரூபாய் விற்பனையும், இந்த ஆண்டு 75 லட்ச ரூபாய் இலக்கு உள்ளதாக கூறிய மாவட்ட ஆட்சியர், கிராமங்கள் தோறும் உள்ள தொழிலாளர்களுக்கு அவர்களின் தொழிலை மேம்படுத்துவதற்கான இந்த தீபாவளி விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

Views: - 36

0

0