சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: குற்றவாளிக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை

27 January 2021, 3:32 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2017-ம் ஆண்டு குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ஜெயந்தி நகர் பகுதியில் சமையலர் பணிபுரியும் ஆண்டனி வினோத் என்ற நபர் 17 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததையடுத்து ஆண்டனி வினோத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று உதகையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருணாச்சலம் பாலியல் துன்புறுத்தல் ,கொலை மிரட்டல், உட்பட மேலும் ஓர் வழக்கு என மூன்று வழக்கு பிரிவின்கீழ் 44 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதம் விதித்து தீர்பளித்தார். நீலகிரி மாவட்டத்தில் இதுவரை நடந்த பாலியல் சம்மந்தபட்ட வழக்குகளில் இன்று வழங்கப்பட்ட இத்தீர்ப்பு உச்சபட்ச தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0