18 டன் ரேஷன் அரிசி கடத்தல் : 4 கார், 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்…….
17 November 2020, 1:54 pmவேலூர் : ஆம்பூர் அருகே வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற 2 லாரியுடன் 18 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 கார் 9 இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம் அகரம் சேரி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திட்டமிட்டு குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு வடக்கு மண்டல டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையிலான நுண்ணறிவு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வேலூரில் இருந்து ஆம்பூரை நோக்கி வந்த இரண்டு லாரிகளை மடக்கி சோதனை செய்ததில் வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற 18 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 கார் 9 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
இந்தக் காட்சிகள் அனைத்தையும் இளைஞர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்துள்ளார்.அந்த வீடியோ பதிவு வெளியிடப்பட்ட நிலையில் தற்போது அந்த காட்சி சமூகவலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடியோ காட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.