முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல்: இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்…டாஸ்மாக் கடைகளை திறக்க தடை…!!

Author: Aarthi Sivakumar
4 October 2021, 11:12 am
Quick Share

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது.

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

மேலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 9 மாவட்டங்களில் 23 ஆயிரத்து 998 பதவிகளை கைப்பற்ற, 79 ஆயிரத்து 433 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில், 6ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது.

பிரச்சாரம் ஓய்ந்ததை அடுத்து, உள்ளாட்சிகளுடன் தொடர்பில்லாத நபர்கள் வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், காலை 10 மணி முதல் 6ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Views: - 180

0

0