சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் இருவர் கைது

19 September 2020, 8:10 pm
Quick Share

தருமபுரி: தருமபுரியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இருவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், ஏ.கொல்லஅள்ளியை அடுத்த மேல் கொட்டாய் மேடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் கோவிந்தன். கண்ணன் மகன் விஷ்ணு,ராமசந்திரன் மகன் தேவராஜ், கீழ் கொட்டாய் மேடு பகுதியை சேர்ந்த மோகன் மகன் வெங்கடேசன் இவர்கள் நான்கு பேரும், மேல்கொட்டாய் மேடு பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்தாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரையடுத்து தருமபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

அதில் சிறுமியை அந்த நான்கு பேரும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து காவல் துறையினர் கோவிந்தன் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் வெங்கடேசன், தேவராஜ் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Views: - 8

0

0