முன்விரோதத்தால் கஞ்சா போதையில் இளைஞரை வெட்டிய 2 பேர் கைது

Author: Udhayakumar Raman
18 October 2021, 5:31 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடியில் யார் பெரிய தாதா என்ற முன்விரோதத்தால் கஞ்சா போதையில் இளைஞரை வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வியாசர்பாடி சி கல்யாணபுரம் 5 வது தெருவைச் சேர்ந்தவர் மணிமாறன் வயது 20.. இவர் பட்டரவாக்கத்தில் உள்ள டைல்ஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். வியாசர்பாடி கல்யாணபுரம் 4 வது தெரு வழியாக சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த இரண்டு இளைஞர்கள் கஞ்சா போதையில் மணிமாறனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மணிமாறணை வெட்டியுள்ளார். இதில் மணிமாறனுக்கு இடது கை மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வியாசர்பாடி கூட்செட் பகுதியில் பதுங்கியிருந்த வியாசர்பாடி பி கல்யாணபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த விக்கி (எ) மலாய் விக்கிஆகிய இருவரையும் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களுக்கும் மணிமாறனுக்கும் ஏற்கனவே ஏரியாவில் யார் பெரிய தாதா என்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாகவும் அதனால் மணிமாரணை வெட்டுவதற்காக இவர்கள் வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 113

0

0