கஞ்சா விற்பனை செய்த வழக்கறிஞர் கைது: 2 கிலோ கஞ்சா பறிமுதல்

7 November 2020, 10:27 pm
Quick Share

சென்னை: எம்.கே.பி நகரில் கஞ்சா விற்பனை செய்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை வியாசர்பாடி எஸ்.ஏ காலனி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக எம்.கே.பி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எம்.கே.பி நகர் போலீசார் அந்த பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபர் ஒரு பொருளை வாங்குவதை கண்ட போலீசார் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அப்பொழுது அந்த பார்சலை திறந்து பார்த்த போது அதில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பதும், இவர் வழக்கறிஞராக இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இவரிடம் கஞ்சா வாங்க வந்த நபர்  கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்த நூர் முகம்மது என்பது தெரிய வந்தது. இதனையடுத்து இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த எம்.கேபி நகர் போலீசார் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 18

0

0