சவுடு மண் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது.!!
5 August 2020, 6:55 pmகாஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சவுடு மண் கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் சட்டத்திற்கு புறம்பாக சவுடு மண் கடத்தி தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர்.
அப்போது உரிய அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த முரளி, சுரேஷ் ஆகியோரை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை கைப்பற்றியதுடன் தலைமறைவான செல்வம் மற்றும் கோவிந்தன் ஆகியோரை வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.