2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: சிறுவன் பலத்த காயம்

15 January 2021, 10:17 pm
Quick Share

அரியலூர்: ராயம்புரத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுவன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ராயம்புரம் கிராமத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. செந்துறையில் இருந்து அரியலூரை நோக்கி வந்து கொண்டிருந்த டாடா சுமோ வாகனம் ராயம்புரம் அருகே வந்தபோது தனது கட்டுபாட்டை இழந்து எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் எதிரே வந்த கார் சாலையின் ஒரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி பின்னர் பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்தில் டாடோ சுமோ வாகனத்தில் வந்தவருக்கு எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். இந்நிலையில் எதிரே காரில் வந்த 15 வயது மதிக்கதக்க சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0