மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்கள் கைது

6 March 2021, 9:37 am
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்களை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த தளவாய்பட்டினத்தை சேர்ந்த ஷேக்தாவுத் என்பவரது மகன் சையது பாஷா (வயது 21). இவர் அங்குள்ள இறைச்சிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய நண்பர் அப்பாஸ் அலி (21). ஆட்டோ டிரைவர்.இந்த நிலையில் சையது பாஷா அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.அப்போது 10-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி அந்த மாணவிக்கு சையது பாஷா பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல சையது பாஷா ஒரு வீட்டுக்கு சென்றபோது அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த அப்பாஸ் அலியும் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் அந்த மாணவி அங்கிருந்து தப்பிச்சென்று தனது உறவினரிடம் தெரிவித்தார். போக்சோ சட்டத்தில் கைது இது குறித்து சிறுமியின் உறவினர் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அந்த மாணவியை அழைத்து விசாரித்தனர். விசாரணையில் சையது பாஷா மற்றும் அப்பாஸ் அலி இருவரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து சையது பாஷா மற்றும் அப்பாஸ் அலி இருவர் மீதும் தாராபுரம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தார். பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Views: - 1

0

0