போதை பொருட்களை மொத்த விற்பனை செய்யும் கும்பல் கைது

16 October 2020, 9:35 pm
Quick Share

சென்னை: சென்னை அருகே போதை பொருட்களை மொத்த விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்து, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை ஓட்டேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து போதை பொருட்கள் விற்க்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலில் அடிப்படையில் ஓட்டேரி போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் போதைப் பொருட்களை அம்பத்தூரிலிருந்து கொண்டு வரப்படுவதும் கண்டறியப்பட்டது.

அம்பத்தூர் பகுதியில் போதை பொருட்களை மொத்த விற்பனை செய்ய 2 பேர் கொண்டு வந்துள்ளதாக போலீசார் கண்டுபிடித்து , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்ததில் முகமது சலீம் (52) , அபுபக்கர் சித்திக் (32) என்பதும் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 50 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு , இருவரையும் ஓட்டேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 34

0

0