கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்கள் கைது

6 November 2020, 7:09 pm
Quick Share

திருச்சி: திருச்சி பகுதியில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 2 வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் சில சமுக விரோதிகள் ஈடுப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் புகார் வந்தது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை டிஎஸ்பி பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து,

காட்டூர் பகுதியை சேர்ந்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கமால் மற்றும் முத்துமணி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சா, 2 விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Views: - 20

0

0