எதிரியை கொலை செய்யவதற்காக நாட்டு வெடி குண்டு தயார் செய்த 2 இளைஞர்கள் கைது

Author: kavin kumar
7 November 2021, 5:54 pm
Quick Share

புதுச்சேரி:புதுச்சேரியில் எதிரியை கொலை செய்யவதற்காக நாட்டு வெடி குண்டு தயார் செய்து வைத்திருந்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புதுச்சேரி லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் பகுதியில் இளைஞர்கள் சிலர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிவதாக லாஸ்பேட்டை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, லாஸ்பேட்டை குற்ற பிரிவு சார்பு ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் கிழக்கு கடற்கரை சாலை, சாமிபிள்ளை தோட்டம் ஆகிய பகுதிகளில் தொடர் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது சாமிபிள்ளை தோட்டம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திறந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் நாட்டு வெடிகுண்டு, மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் லாஸ்பேட்டை கருபடிகுப்பத்தை சேர்ந்த அருண் மற்றும் சாமிபிள்ளை தோட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பதும், அவர்கள் தங்களது எதிரியான கவாஸை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய தீட்டம் திட்டி நாட்டு வெடிகுண்டுகள் தயார் செய்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஒரு கொலை மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 347

0

0