வாக்கு எண்ணிக்கை பணியில் 200 அலுவலர்கள்.. பாதுகாப்புக்கு 400 போலீசார்..! – ஆட்சியர் பேட்டி

Author: kavin kumar
21 February 2022, 8:04 pm
Quick Share

தருமபுரி : தருமபுரியில் வாக்கு எண்ணும் பணியில் 200க்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட உள்ளதாகவும், 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் நாளை வாக்கு எண்ணிக்கைக்கு செய்யபட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தருமபுரி மாவட்டத்தில் 1 நகராட்சி மற்றும் 10 பேருராட்சியில் 192 வார்டுகள் உள்ளன. இதில் பாலக்கோடு பேரூராட்சியில் 5 மற்றும் 11 வார்டுகளில் போட்டியிட்ட 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யபட்டனர். அதனையடுத்து 190 வார்டு பதவி இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் நாளை வாக்கு எண்ணிக்கை தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெருகிறது.

வாக்கு எண்ணிக்கையின் போது 400க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். அதே போல் 200 க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் நியமிக்கபட்டுள்ளனர். 33 வார்டுகள் கொண்ட நகராட்சிக்கு 10 சுற்றுகளும், 10 பேரூராட்சிக்கு 8 முதல் 15 சுற்றுகள் நடைபெரும் எனவும், ஒவ்வொரு வார்டு வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அந்த வார்டின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் வெளியேற்றபட்ட பின்னர் தான் அடுத்த வார்டுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெரும் என்றும்,

வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளர்கள் உட்பட யாருக்கும் செல்போன் கொண்டுவர அனுமதி இல்லை என்று கூறிய அவர், வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்று முடிவும் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது மாவட்ட தேர்தல் பார்வையாளர் மருத்துவர். பிருந்ததேவி உடனிருந்தார்.

Views: - 338

0

0