புதுச்சேரியில் 206 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

20 October 2020, 2:34 pm
Cbe Corona- updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 206 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 33, 452 ஆக உயர்ந்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 68,35,656 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 971 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,05,526 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் 143 நபர்களுக்கும், காரைக்காலில் 29 நபர்களுக்கும், ஏனாமில் 18, நபர்களுக்கும் மாஹேவில் 16 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,100 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 28,774 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 1 நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 577 ஆக உயர்ந்துள்ளது.தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 33452 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 14

0

0