தீரன் சின்னமலையின் 216வது நினைவு தினம்: சொந்த ஊரில் அமைச்சர்கள் மரியாதை…!!

Author: Aarthi Sivakumar
3 August 2021, 5:30 pm
Quick Share

திருப்பூர்: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த ஊரில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை பிறந்த ஊரான மேலப்பாளையத்தில் அவரது உருவப் படத்திற்கு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை பிறந்த ஊரான காங்கயம் அடுத்துள்ள மேலப்பாளையத்தில் அவரது 216வது நினைவு நாள் விழா நடைபெற்றது. இதில் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தீரன்சின்னமலை திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

மாவட்ட கலெக்டர் வினீத், திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாதன் தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் காங்கயம் தாசில்தார் சிவகாமி, காங்கயம் ஒன்றிய நகர நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

Views: - 286

0

0