நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21-ம் ஆண்டு நினைவு தினம்: சிவாஜி சிலைக்கு மலர் தூவி மரியாதை

21 July 2021, 1:28 pm
Quick Share

தஞ்சாவூர்: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாளை முன்னிட்டு சிவாஜி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எண்ணற்ற பல்வேறு குணாதிசயங்களில் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று விளங்கியவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சோழமண்டல சிவாஜி பாசறை சார்பில் தஞ்சாவூரில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சை மணி மண்டபம் பகுதியில் உள்ள சிவாஜி கணேசன் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாவட்ட தலைவர் சதா வெங்கட்ராமன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிவாஜி பாசறை நிர்வாகிகள் ரசிகர்கள் கலந்து கொண்டனர்

Views: - 80

0

0