மனை வாங்கி தருவதாக கூறி ரூ.22.55 லட்சம் மோசடி செய்த நபர் கைது

Author: kavin kumar
6 October 2021, 3:18 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் மனை வாங்கி தருவதாக கூறி ரூ.22.55 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் சரவணன் இவரிடம் அதேபகுதியில் உள்ள வாஞ்சிநாதன் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பரின் மனைவி பெயரில் உள்ள மனையை வாங்கி தருவதக கூறி ரூ.22.55 லட்சம் பணத்தை பெற்றுகொண்டுள்ளார். மேலும் அந்த மனைக்கு போலி பத்திரம் தயார் செய்து சரவணனிடம் வழங்கியுள்ளார். இதனையடுத்து போலி பத்திரம் கொடுத்து வாஞ்சிநாதன் தன்னை ஏமாற்றியதை அறிந்த சரவணனிடம் பணத்தை கேட்டு உள்ளார். இதற்கு பணத்தையும் தராமல் வாஞ்சிநாதன் ஏமாற்றியதால், தன்னிடம் நிலம் வாங்கி தருவதாக கூறி பணத்தை பெற்று கொண்டு போலீ பத்திரம் கொடுத்து வாஞ்சிநாதன் ஏமாற்றி விட்டதாக மங்களம் காவல் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த மங்களம் காவல்துறையினர் வாஞ்சிநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 266

0

0