பிறந்தநாளை முன்னிட்டு முக கவசம் இலவசமாக வழங்கிய 2ஆம் வகுப்பு சிறுவன்:வைரலாகும் வீடியோ

4 July 2021, 7:31 pm
Quick Share

மதுரை: தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு முக கவசம் அணியாத நபர்களுக்கு அதனை கடலை மிட்டாய் உடன் இலவசமாய் வழங்கி முகக் கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பேசிய 2ஆம் வகுப்பு மாணவன் சுதர்சனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மதுரை தெப்பக்குளம் பங்கஜம் காலனியைச் சேர்ந்தவர் அசோக்குமார். வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழிலாளி ஆவார். பனைமரம் குறித்த விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு, கரோனா விழிப்புணர்வு என பல்வேறு சமூக சேவைகளை மேற்கொண்டு வருகிறார். இவரது மகன் சுதர்சன் கே.வி துரையப்ப நாடார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இன்று அவருக்கு ஏழாவது பிறந்தநாள் என்பதால், முகக் கவசம் அணியாமல் தெருவில் வலம் வரும் நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, தாம்பூல தட்டில் முக கவசங்களும் கடலைமிட்டாய்களையும் ஏந்தி அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில் நின்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் முக கவசம் அணிவதை வலியுறுத்தி அச்சிறுவன் பேசியதை பொதுமக்கள் வியந்து பார்த்தனர்.

Views: - 70

0

0