வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது..

Author: Udayaraman
3 August 2021, 11:27 pm
Quick Share

சென்னை: சென்னையில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை எம்.கே.பி நகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா  விற்கப்படுவதாக எம்.கே.பி நகர் போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், எம்.கே.பி நகர் போலீசார் , எம்.கே.பி நகர் 15வது மேற்கு குறுக்கு தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்த எம்.கே.பி நகர் பகுதியை சேர்ந்த கணேசன் , பூந்தமல்லியை சேர்ந்த சதீஷ் குமார் , குமரன் சாவடி பகுதியைச் சேர்ந்த சார்லஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் எம்.கே.பி நகர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 89

0

0