லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற 3 பேர் கைது: 31 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Author: Udayaraman
1 August 2021, 8:33 pm
Quick Share

வேலூர்: காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்து, 31 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடியில் குடிமை பொருள் வழங்கள் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தனிப்படையினர் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டனர். இரகசிய தகவலின் பேரில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்த போது சுமார் 31 டன் 622 மூட்டைகளில் தமிழக அரசின் பொது விநியாக திட்ட ரேசன் அரிசி லாரி மூலம் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு கடத்தி சென்ற பங்காருபேட்டை சேர்ந்த பாலு, கோபி மற்றும் சென்னையை சேர்ந்த லாரி உரிமையாளர் பிரபு ஆகியோர்கள் கைது செய்யப்பட்டார்கள். பொது விநியோக திட்ட ரேசன் அரிசியை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து வேலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 364

0

0