அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த 3 அரசு ஊழியர்கள் கைது

26 February 2021, 10:36 pm
Quick Share

வேலூர்: பள்ளிகொண்டா அருகே நள்ளிரவில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த 3 அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிகொண்டா அடுத்த கந்தன்சாவடி அருகே நேற்று இரவு வேலூரில் இருந்து அரசுப்பேருந்துகள் பேர்ணாம்பட்டு, சேலம் நோக்கி 3 பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்தன. இறையன்காடு , கந்தன்சாவடி அருகே பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக செற்று கொண்டு இருந்த போது திடீரென பேருந்தின் முன் கண்ணாடி உடைந்தது. இதனையடுத்து 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் ஜல்லி கற்க்களை கொண்டு பேருந்தின் கண்ணாடியின் மீது வீசியதில் 3 பேருந்தில் இருக்கும் பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைந்தது.

உடனடியாக பேருந்தை நிர்க்க வைத்து பார்த்த போது நடத்துனர் தியாகராஜன் என்பவர் படுகாயத்துடன் கீழே விழுந்து இருந்தார். இதனை பார்த்த ஒட்டுனர் அவருக்கு தண்ணீர் கொடுத்து எழுப்பியபோது மர்ம நபர்கள் 3 பேர் வந்து பஸ் ஸ்ட்ரைக் செய்துள்ளோம், நீங்க ஏன் பேருந்து ஓட்டிச்செல்லுரிங்கள் என்று தகாத வார்தைகளால் கூறி சென்றுள்ளனர். இதனையடுத்து அருகில் இருந்த பள்ளிகொண்ட காவல் நிலையத்தில் நடத்துனர் தியாகராஜன் புகார் கொடுத்தார்.

மேலும் தீவிர விசாரனை செய்து போலீசார் 3 பேரை கைது செய்தனர். மேலும் விசாரனையில் அவர்கள் வேலூர் கொணவட்டம் பஸ்டிப்போவில் பேருந்தில் பணியாற்றும் ஊழியர்கள் என்பதும், இதில் குற்றவாழிகளான நடத்துனர் தனஞ்செழியன், ஓட்டுனர்கள் சரவணன், செந்தில் குமார் என்பது தெறியவந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 10

0

0