சாலை விபத்தில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்பு: 5 பேர் காயம்…

Author: Udhayakumar Raman
8 September 2021, 6:31 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புல்வாய்பட்டி விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் இரண்டு பெண்கள் மற்றும் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சாரதா நகர் பகுதியைச் சேர்ந்த ஆவுடையம்மாள் குடும்பத்தினர் கயத்தாறு அருகே உள்ள இலந்தைகுளம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு வளைகாப்பு விழாவிற்கு சென்றுள்ளனர். இவ்விழா முடிந்து மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது சாத்தூர் அருகிலுள்ள புல்வாய்பட்டி விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது கார் தன் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பாலத்தில் மோதி சாலையின் ஓரத்தில் உள்ள ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் வந்த எட்டு பேருக்கும் பலத்த அடிபட்டது. இதில் இதில் ஆவுடையம்மாள், தனலட்சுமி மற்றும் சரவண பிரியா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த 5 பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சரவண பிரியாவின் உடல் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கும் ஆவுடையம்மாள் மற்றும் தனலட்சுமி ஆகியோர்களின் உடல் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 167

0

0