பிரபல கஞ்சா வியாபாரி உட்பட மூவர் கைது: 4 1/2 கிலோ கஞ்சா பறிமுதல்…

11 September 2020, 5:20 pm
Quick Share

தூத்துக்குடி: தாளமுத்துநகரில் பிரபல கஞ்சா வியாபாரி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 4 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாநகர பகுதியில் கஞ்சா வியாபாரம் மற்றும் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும், இதனால் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றது. அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை கண்கானிப்பாளர் மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் உதவி ஆய்வாளர் மகாராஜன் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடை பெற்று வந்தது.

இந்நிலையில் Tசவேரியார்புரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த லதா என்ற பெண்ணை பிடித்து விசாரனை செய்ததில், அவர் பிரபல கஞ்சா வியாபாரி என்றும் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரிடமிருந்து 4 1/2 கிலோ கஞ்சா வினை பறிமுதல் செய்த காவல்துறையினர் லதாவிற்கு உடந்தையாக இருந்த ராஜா, சோலையப்பன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Views: - 1

0

0