3 வயது சிறுவன் மீது தொலைக்காட்சி பெட்டி தவறி விழுந்து உயிரிழப்பு…

17 August 2020, 3:42 pm
Quick Share

செங்கல்பட்டு: தாம்பரம் அருகே 3 வயது சிறுவன் மீது தொலைக்காட்சி பெட்டி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் அடுத்த அகரம்தென் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் .இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இதில் இரண்டாவது ஆண் குழந்தையான கவியரசு (3) அலமாறியில் உள்ள தொலைகாட்சியின் பெட்டியின் மீது இருந்த செல்போனை எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது நிலைதடுமாறி தொலைகாட்சி பெட்டி குழந்தையின் தலையில் விழுந்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து உடலை கைப்பற்றி சேலையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 28

0

0