கோவையில் கஞ்சா, போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகள் விற்பனை : 3 வாலிபர்கள் கைது!!

Author: Udhayakumar Raman
28 July 2021, 2:51 pm
Cbe Kanja Seized- Updatenews360
Quick Share

கோவை : நகர்பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்ற வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இளைஞர்கள் பலர் போதைக்கு அடிமையாகி வருகின்றனர் . அதுவும் குறிப்பாக வலி நிவாரணி மாத்திரைகளை தண்ணீரில் கலந்து சிரஞ்ச் மூலம் செலுத்தி போதை அடையும் புதிய பழக்கத்தை செய்து வருகின்றனர்.
இதையடுத்து கோவை மாநகர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இது போன்ற போதைப் பொருட்களை விற்கும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒண்டிப்புதூர் பகுதியில் காலி இடத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர்களை விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர் .மேலும் அவர்களிடம் சோதனை நடத்தியபோது அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் போதை மாத்திரைகளும் மற்றும் சிரஞ்சுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் புலியகுளம் அம்மன் நகர் அம்மன்குளம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் முத்துக்குமார் (வயது 21 )ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த டேனியல் ராஜ் என்பவரின் மகன் கோகுலகிருஷ்ணன்(வயது 21 )மற்றும் ஒண்டிப்புதூர் வள்ளலார் அப்பார்ட்மெண்ட் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் ராஜா என்கிற இஸ்ரவேல் ( வயது 21) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் வலி நிவாரணி போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 184

0

0