தடை செய்யப்பட்ட 30 கிலோ குட்கா, பான்மசாலா, பறிமுதல்

15 January 2021, 2:47 am
Quick Share

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே 50கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மண்டபம் கூட்டுரோட்டில், திருக்கோவிலூர் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கடம்பூர் பகுதியை சேர்ந்த ரவி சங்கர் என்பவரை மடக்கிப் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர், விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, ரவிசங்கரை திருக்கோவிலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணை செய்ததில், ர

விசங்கர் எடுத்து வந்த இருசக்கர வாகனத்தில் 5 மூட்டைகளில் இருந்த 50 கிலோ எடையுள்ள சுமார் 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பான்மசாலா இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருவண்ணாமலையிலிருந்து கடம்பூர் பகுதிக்கு விற்பனைக்காக தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ரவிசங்கரை கைது செய்த போலீசார் அவர் எடுத்து வந்த இருசக்கர வாகனம் மற்றும் தடை செய்யப்பட்ட 50 கிலோ எடையுள்ள குட்கா பான்மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Views: - 9

0

0