32வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி

3 February 2021, 1:24 pm
Quick Share

நீலகிரி : 32வது சாலை பாதுகாப்பு வாரத்தின் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார்.

கடந்த 18 ம் தேதி முதல் துவங்கிய சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணிகள் தமிழகம் முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து கழகம்து சார்பில் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் தலைக்கவசம் அணிவது மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இந்தப் பேரணி ஆனது உதகை நகரப்பகுதிகளில் முக்கிய வீதிகள் வழியே பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்றன.

இந்தப் பேரணி நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் D, தியாகராஜன், உதகை நகர டிஎஸ்பி மகேஸ்வரன் , ஆய்வாளர் நிலை ஒன்று குலோத்துங்கன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்துல்கலாம், துணை ஆய்வாளர் வின்சென்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0