ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை

15 November 2020, 7:48 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே ஆண் யானை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ஊடே துர்கம் வனப்பகுதியில் இன்று கால்நடை மேய்க்கச் சென்ற அப்பகுதி மக்கள் ஒரு ஆண் யானை இறந்து கிடப்பது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர் இறந்த யானையின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சுமார் 20 வயதிற்கு மேல் மதிக்கத்தக்க ஆண் யானை,

உடலில் எந்தவித காயங்களும் இல்லாமலும், தந்தங்கள் உள்ளிட்ட உறுப்புகள் அப்படியே உள்ள நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இதற்கான காரணம் உடற்கூறு ஆய்வுக்கு பிறகே தெரியவரும் என மாவட்ட வன அலுவலர் பிரபு தெரிவித்தார். தொடர்ந்து கடந்த சில மாதங்களாக ஓசூர் வனக்கோட்டம் பகுதிகளில் யானைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருவதால் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.

Views: - 18

0

0