புதுச்சேரியில் புதிதாக 371 பேருக்குக் கொரோனா தொற்று; இதுவரை 2.25 லட்சம் பேருக்குப் பரிசோதனை

Author: Udayaraman
9 October 2020, 7:01 pm
India_Coronavirus_UpdateNews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 371 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 5,006 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 287, காரைக்கால் – 53, ஏனாம் – 8, மாஹே- 23 என மொத்தம் 371 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 558 ஆக உயர்த்துள்ளது. இறப்பு விகிதம் 1.81 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 30 ஆயிரத்து 904 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,397 பேர், காரைக்காலில் 502 பேர், ஏனாமில் 56 பேர், மாஹேவில் 155 பேர் என 3,110 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல் புதுச்சேரியில் 1,439 பேர், காரைக்காலில் 92 பேர், ஏனாமில் 78 பேர், மாஹேவில் 84 பேர் என 1,693 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,803 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று புதுச்சேரியில் 247 பேர், காரைக்காலில் 7 பேர், ஏனாமில் 17 பேர், மாஹேவில் 16 பேர் என மொத்தம் 287 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 543 (82.65) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2 லட்சத்து 25 ஆயிரத்து 18 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 598 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

Views: - 30

0

0