மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்: 3வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்..!!

8 February 2021, 5:21 pm
myanmar protest - updatenews360
Quick Share

யாங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக யாங்கூன் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் 3வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம், ஜனநாயக ஆட்சி தான் வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி, கோஷமிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

10 ஆண்டுகளுக்கும் மேல் இல்லாத வகையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கட்டுப்படுத்த களமிறங்கியுள்ள இராணுவம், தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கலைத்து வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய போராட்டம் மியான்மரில் வெடித்துள்ளது.

இதற்கிடையில், தென்கிழக்கு மியான்மர் நகரமான மியாவடியில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் மற்றும் போராட்டக்காரர்களை கைது செய்தனர். புரட்சியின் அடையாளமாக மூவிரல் வணக்கம் செலுத்தியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 0

0

0