கார் கண்ணாடி உடைத்து நகை திருடப்பட்ட வழக்கில் 4 நபர்கள் கைது

13 November 2020, 8:09 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் கடந்த மாதம் கார் கண்ணாடி உடைத்து நகை திருடப்பட்ட வழக்கில் 4 நபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர் கீழமேடு பகுதியை சேர்ந்த விஜயன்(40). பெங்களுருவில் தனியார் வங்கியில் மேலாளாராக இருக்கிறார். நெல்லையில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கடந்த அக்.31ம் தேதி காரில் கோயம்புத்தூர் திரும்பி போது, விருதுநகர் – மதுரை ரோட்டில் உள்ள பிரபல உணவகத்தில் நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார். அப்போது காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த 18 பவுன் நகை உட்பட இரு பேக்குகளை கொள்ளைக் கும்பல் திருடிச் சென்றது. இது குறித்து விருதுநகர் ஊரக காவல்துறை வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் எண்கள் பதிவின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். அதன் படி அநத நேரத்தில் அந்த இடத்தில் இருந்து சென்ற காரின் கார் பதிவு எண்ணை கொண்டு காரை தேடி வந்தனர். இதை அடுத்து அந்த கார் திருச்சியை சேர்த்து என்பதும், கடந்த மாதம் 31ம் தேதி திருச்சியை சேர்ந்த தினேஷ்குமார்(25), சுதன் சுந்தர்ராஜ்(25), புதுக்கோட்டை சத்யா நகரை சேர்ந்த ரஹமத்துல்லா(22), நாமக்கல் ராசிபுரத்தை சேர்ந்த சிவா(22) ஆகிய நான்கு நபர்களும் விருதுநகரில் உணவக வாசலில் இருந்த காரின் கண்ணாடியை உடைத்து திருடியை தெரியாத வந்தது. இதை அடுத்து அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 8 1/4 பவுன் நகையை மட்டும் மீட்டுள்ளனர். மேலும் வாடகை காரை பறிமுதல் செய்து, காரின் டிரைவர் சங்கர்கணேஷ்(40) என்பவரிடம் ஊரக காவல்துறை விசாரித்து வருகின்றனர்.

Views: - 16

0

0