குட்கா பொருட்களை கொரியர் மூலம் கடத்திய 4 பேர் கைது: 960 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்…

Author: kavin kumar
17 August 2021, 11:54 pm
Quick Share

மதுரை: மதுரையில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்களை கொரியர் மூலம் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 960 கிலோ பான்மசாலா, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மதுரையில் தனியார் கொரியர் சேவை மூலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்திய எஸ்.எஸ்.காலனி போலீசார் கொரியரில் வந்த முகவரியை ஆய்வு செய்ததில் நெல்லை மாவட்டதிலிருந்து கொரியர் மூலம் கடத்துவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நெல்லை சென்ற காவல்துறை கூடங்குளத்தை சேர்ந்த கண்ணன், திசையன்விளையை சேர்ந்த பாண்டியராஜன், வாழகுரு மற்றும் மதுரையை சேர்ந்த ரோஷன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்கள் வாகனங்களில் பதுக்கி வைத்திருந்த 960 கிலோ பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்று கொரியர் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தும் சம்பவத்தில் கும்பலாக செயல்படுகிறார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 216

0

0