தனியார் துறைமுகத்தில் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரிகள் திருட்டு: 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

Author: Udhayakumar Raman
23 August 2021, 5:57 pm
Quick Share

திருவள்ளூர்: காட்டுப்பள்ளி அதானி தனியார் துறைமுகத்தில் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரிகளை திருடிய 7 பேரை கைது செய்து காட்டூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் அமைந்துள்ள அதானி தனியார் துறைமுகத்தில் சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பேட்டரிகளை திருடிய வழக்கில் திருவண்ணாமலையைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் வெங்கடேஷ், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் இளமாறன், தென்காசியை சேர்ந்த லாரி ஓட்டுனர் பாண்டி கண்ணன், திருவொற்றியூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் கார்த்திக், பார்த்திபன் மற்றும் அதானி துறைமுகத்தில் பணியாற்றிய எண்ணூரை சேர்ந்த சதீஷ்குமார், பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த நிர்மல் ஆகிய 7 பேரை கைது செய்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு பின்னர் 7 பேரையும் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் கிளை சிறையில் அடைத்தனர்..

Views: - 109

0

0