வாலிபரை குடிபோதையில் தாக்கிய 4 பேர்: 3 பேர் தலைமறைவு

19 August 2020, 8:25 pm
Quick Share

சென்னை: மாதவரம் அருகே வாலிபரை குடிபோதையில் பீர் பாட்டிலால் தாக்கிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை மாதவரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மகன் அபிஷேக் (20)
நேற்று மாலை நேரத்தில் அபிஷேக் மாதவரம் அருகில் உள்ள வட்டாமணி குளம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது , ஆண்டார் குப்பம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஹரி என்பவரின் மகன் அஜித் ( 22) தனது கூட்டாளிகள் 3 பேருடன் மது அருந்தி கொண்டிருந்தார்.

போதையில் இருந்த அஜித் மற்றும் கூட்டாளிகள் அவ்வழியே வந்து அபிஷேக் என்பவரை வழிமறித்து வம்புக்கு இழுத்து தகாத வார்த்தைகளால் திட்டி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் வம்புக்கு இழுத்து சண்டை போட்டது மட்டுமல்லாமல் அபிஷேக்கின் தலையில் பீர் பாட்டிலால் மண்டையில் அடித்துள்ளனர்.இதனால் அவருக்கு மண்டையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய தொடங்கியுள்ளது.இதனை கண்டு பயந்த குடிமகன்கள் தலை மறைவாகினர்.

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த மாதவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரத்த காயங்களுடன் இருந்த அபிஷேக் என்பவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அஜித் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Views: - 60

0

0