தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் உயிரிழப்பு

Author: Udayaraman
2 August 2021, 4:52 pm
Quick Share

திருவாரூர்: மன்னார்குடியில் வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மீனாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து, லதா தம்பதியரின் 2 வயது மகன் யோகேஸ்வரன். இன்று மதியம் சிறுவன் யோகேஸ்வரன் வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். வெகு நேரமாகியும் சிறுவனை காணாததால் பெற்றோர் சிறுவனை தேடியுள்ளனர். அப்போது வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் யோகேஸ்வரன் மிதந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். யோகேஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 103

0

0