விளையாடிக்கொண்டிருந்த 4 வயது குழந்தை உயிரிழப்பு

14 July 2021, 2:31 pm
Quick Share

திருவள்ளூர்: புழல் ஏரி ஊற்று அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது ஆண் திடீரென குழந்தை உயிரிழந்தார்.

புழல் அடுத்த தண்டல்கழனி சத்யாநகர் பகுதியை சேர்ந்தவர் பிவின் ஜோசப். இவருடைய மனைவி அக்ஷயா. இவர் சென்னை கொரட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் ஜெய்ரோஸ் ஜோசப் ( 4 ) வீட்டின் அருகில் நேற்று மாலை 3 மணியளவில் விளையாட சென்றபோது அருகிலுள்ள புழல் ஏரிகரையின் ஓரம் உள்ள ஊற்றின் வழியே வரும் தண்ணீர் குளத்தில் தவறி விழுந்து போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்து திணறியபோது சிறுவனின் தந்தை உடனே வந்து பார்த்து அவனை மீட்டு

பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து போனதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 97

0

0