மதுபோதையில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரை தாக்கிய 4 இளைஞர்கள் கைது

15 July 2021, 1:28 pm
Quick Share

சென்னை: புளியந்தோப்பில் மதுபோதையில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரை தாக்கிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சிவா. இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக உள்ளார். கடந்த 11 ஆம் தேதி இவர் வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது குடிபோதையில் அங்கு வந்த நான்கு இளைஞர்கள் சிவாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். சிறிது நேரத்தில் சிவாவை கண் மூடித்தனமாக தாக்கி அடித்துள்ளனர். இதில் சிவாவிற்கு பின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவா, இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரகாஷ், கார்த்திக், மனோஜ், அப்பு என்கின்ற சையத் ஆசிப ஆகிய 4 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 95

0

0