ஸ்ரீரங்கம் கோவிலில் 44 லட்சம் உண்டியல் காணிக்கை

Author: Udayaraman
28 July 2021, 7:28 pm
Quick Share

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலில் 44 லட்சம் உண்டியல் காணிக்கையாக ரூபாய் 44 லட்சத்து 93 ஆயிரத்து 020மும், தங்கம் 94 கிராமும், வெள்ளி 817 கிராமும் மற்றும் 50 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று காலை ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் உண்டியல்கள் திறந்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, திருச்சி மண்டல இணை ஆணையர் மற்றும் அலுவலர் சுதர்சன் முன்னிலையில் பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. திருக்கோயில் பணியாளர்கள், மற்றும் தன்னார்வர்கள் உண்டியல் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர்.ஸ்ரீரங்கம் உண்டியல்கள் திறந்து பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 44,93,020லட்சமும், தங்கம் 94 கிராமும், வெள்ளி 817 கிராமும் மற்றும் 50 வெளிநாட்டு ரூபாய்தாள்கள் கிடைக்கப்பெற்றன.

Views: - 102

0

0